புலிகளின் தாக்குதலுக்கு இலக்கான பொலிஸாருக்கு அரசாங்கம் கொடுக்கும் வெகுமானம்!

Report Print Murali Murali in அரசியல்

விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது அங்கவீனமடைந்த பொலிஸாருக்கான பதவியுயர்வுகள் மற்றும் சம்பள அதிகரிப்புகள் வழங்கப்படவுள்ளன.

நாடாளுமன்றில் இன்று கருத்து வெளியிட்ட பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் அவயவங்களை இழந்து மருத்துவ ஆலோசனைக்கு அமைய ஓய்வுபெற்ற பொலிஸார், இலகுவான பணிகளில் அமர்த்தப்பட்டுள்ள பொலிஸாருக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள அதிகரிப்பு வழங்கப்படவுள்ளன.

இந்த விடயம் குறித்து அமைச்சரவையில் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை அங்கீகாரத்துக்கு அமைய, யுத்தத்தினால் அவயவங்களை இழந்து சேவையிலிருந்து ஓய்வுபெற்ற 785 பொலிஸ் அதிகாரிகள், அவயவங்களை இழந்து இலகு சேவையில் ஈடுபட்டுள்ள 677 பொலிஸார் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு இலகு சேவையில் ஈடுபட்டுள்ளவர்களில் 340 பேருக்கும் இரண்டு சம்பள உயர்வுகளை அவர்கள் அங்கவீனம் அடைந்த தினத்தின் அடிப்படையில் பெற்றுக் கொடுப்பதற்கு 2018ஆம் ஆண்டு நவம்பர் மாத சுற்று நிரூபத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என அவர் மேலும் கூறியுள்ளார்.

Latest Offers