பால் மாவில் பன்றி கொழுப்புக்கள் சேர்க்கப்படவில்லை! அதற்கு ஆதாரமும் உள்ளது

Report Print Gokulan Gokulan in அரசியல்

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவில் பன்றி கொழுப்புக்கள் சேர்க்கப்பட வில்லை. அதற்கான அனைத்து தரவுகளும் எம்மிடம் உள்ளது என இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டாவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் பன்றி கொழுப்புக்கள் சேர்க்கப்படுவதாக பிரதி அமைச்சர் புதிக்க பத்திரன நாடாளுமன்றத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தகவல் வெளியிட்டார்.

இவ்விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் இணைந்து உரிய அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை ஒன்றினை நடத்தினோம்.

வெளிநாடுகளில் இருந்து எமது நாட்டிற்கு இறக்குமதி செய்கின்ற அனைத்து பால்மாவும் சோதைனைக்கு உட்படுத்துவதாகவும், பால்மாவில் பன்றி கொழுப்புக்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை எனவும் அதிகார்கள் தெரவித்தனர்.

இதற்கான அனைத்து தரவுகளும் எம்மிடம் உள்ளன.

பிரதி அமைச்சர் புதிக்க பத்திரனவிடம் இந்த சம்பவம் தொடர்பில் ஆவணங்கள் இருந்தால், அவருடன் கலந்துரையாடுவதற்கு நாங்கள் தயாராகவுள்ளோம்.

இந்த சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று சபாநாயகர் குழுவொன்று அமைத்து ஆராய வேண்டும் என கூறியிருந்தார்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.