நீண்ட காலத்திட்டத்தின் பாரிய வெற்றியே மதூஷின் கைது! சாகல

Report Print Gokulan Gokulan in அரசியல்

போதைப்பொருள் வர்த்தகரான மாகந்துரே மதூஷ் மற்றும் அவரின் குழுவினர் கைது செய்யப்பட்டமை நீண்ட காலதிட்டத்தின் இறுதி வெற்றியாகும் என அமைச்சர் சாகல ரட்ணாயக தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்திற்கு நேற்றைய தினம் மேற்கொண்ட விஜயத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில்,

சுயாதீனமான பொலிஸ் ஆணைக்குழு மூலமாகவும் அவர்களின் கடின உழைப்பின் மூலமே இவர்களை கைது செய்ய முடிந்தது.

நவீன பயிற்ச்சிகள் மற்றும் அடிப்படை வசதிகளை முன்னேற்றியமையினால் இத்திட்டத்தில் வெற்றிகொள்ள முடிந்தது.

நான் சட்டம் ஒழுங்கு அமைச்சராக இருந்த காலத்தில் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.லத்தீப்பின் வழிகாட்டலின் கீழ் விசேட குழுவொன்று நிறுவப்பட்டது.

குறித்த பொலிஸ் அதிகாரிகளால் மதூஷ் மற்றும் அவரின் குழுவினரை கைது செய்ய பல முறை முயற்சி செய்து இறுதி நேரத்தில் தப்பி சென்றனர்.

போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் பிரிவு ஆகியன சிறப்பாக செயற்பட்டதின் காரணமாக 2017ஆம் ஆண்டு இறுதியில் நூற்றிற்கு 30 வீதம் போதைப்பொருளை கட்டுப்படுத்த முடிந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.