இந்திய கல்விக் கண்காட்சி - 2019

Report Print Mubarak in அரசியல்

இந்திய தூதுரகம் மற்றும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சின் ஒத்துழைப்புடன் இந்திய கல்விக் கண்காட்சி - 2019' ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு கொழும்பு - கிங்ஸ்பெரி ஹோட்டலில் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பல உயர் கல்வி நிறுவனங்கள் இந்த கண்காட்சிக்கு தங்கள் ஆதரவை வழங்கியுள்ளன.

குறித்த கண்காட்சி தொடர்ச்சியாக இன்று காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது கண்காட்சியின் மாணவர்களின் கல்வித் திறனை வளர்க்கும் வழிகாட்டல்கள்,அறிவுத் திறனோடு சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப உபகரணங்களும், கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.