நாடாளுமன்றுக்குள் தண்ணீர் வேண்டாம்

Report Print Ajith Ajith in அரசியல்
63Shares

நாடாளுமன்ற கட்டிடத்துக்குள் தண்ணீர் உட்பட்ட எவ்வித திரவங்களையும் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விருந்தினர்களுக்கும் இந்த தடை குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு கருதியே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்துக்குள் சுடுநீர் உட்பட்ட அனைத்து வசதிகளும் உள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.