தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் நோக்கம் பற்றி கூறும் பிரதமர் ரணில்

Report Print Steephen Steephen in அரசியல்

நாட்டை கட்டியெழுப்பும் நோக்கத்துடனேயே கடந்த 2015 ஆம் ஆண்டு தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

காலியில் இன்று இடம்பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.

தேசிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தி நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் போது பிரச்சினைகள் ஏற்படுவது இயற்கை.

தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களில் இருந்து விடுப்பட்டு, பிரச்சினைகளை தீர்த்துக்கொண்டு, நாட்டுக்காக ஒன்றிணைந்து செயற்பட முயற்சிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.