பொலிஸ் துறையில் மூன்று மாதங்களுக்கு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளேன் - ஜனாதிபதி

Report Print Steephen Steephen in அரசியல்
64Shares

பொலிஸ் திணைக்களத்தை பொறுபேற்று மூன்று மாதம் என்ற குறுகிய காலத்தில் தான் பொலிஸ் துறையை பலப்படுத்த ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அடுத்த சில மாதங்களில் பொலிஸ் துறையை முழுமையாக மாற்றியமைக்க போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்நறுவை மாவட்ட மாநாட்டில் இன்று கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன் போது மேலும் தெரிவிக்கையில்,

சமூகத்தில் பாரதூரமான பிரச்சினையாக இருக்கும் போதைப் பொருள் வியாபாரம் மற்றும் பாதாள உலகக்குழுக்களை ஒடுக்க தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் திணைக்களத்தை நான் பொறுப்பேற்று மூன்று மாதங்களுக்கும் குறைவான காலத்தில் நாட்டில் போதைப் பொருள் வியாபாரம், குற்றத்தடுப்பு, பாதாள உலகக்குழுக்களை அடக்கு தொடர்பான பிரதிபலன்களை நீங்கள் ஊடகங்களில் காணலாம்.

உயிரை தியாகம் செய்து போதைப் பொருள் ஒழிப்பில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகளின் குடும்பங்களுக்கு முதல் முறையாக பதக்கங்கள் வழங்கப்பட்டன.

கடந்த 25 முதல் 30 ஆண்டுகளாக பொலிஸ் துறைக்கு பொறுப்பாக இருந்த அமைச்சர்கள் என்ன செய்தார்கள் என்பதை என்னும் போது வருத்தமளிக்கின்றது.

பொலிஸ் துறையை பொலிஸ் துறையாக மாற்ற இவர்கள் எவரும் பணிகளை மேற்கொள்ளவில்லை.

நான் பொலிஸ் துறையை சுத்தப்படுத்த ஆரம்பித்துள்ளேன். பொலிஸ் துறையை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளேன். சட்டம், ஒழுங்கு, ஒழுக்கம், ஊழல், மோசடி இல்லாத சமூகத்தை உருவாக்குவதே இதன் நோக்கம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.