ஐ.தே.கட்சியின் மெகா கூட்டணியில் இணையும் சுதந்திரக் கட்சியினர்

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் தேர்தலை இலக்கு வைத்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் உருவாக்கப்படும் மெகா அரசியல் கூட்டணியான தேசிய ஜனநாயக முன்னணி தொடர்பான அறிவிப்பு அடுத்த மே மாதம் முதலாம் திகதி உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசிய ஜனநாயக முன்னணி சின்னமாக எதனை பயன்படுத்துவது என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றி பெற்றுள்ளதாகவும் அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது பல சிவில் அமைப்புகளும் முன்னணியில் இணைய தயாராக வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனை தவிர, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அடிப்படை கொள்கையை பாதுகாத்துக் கொண்டு புதிய கூட்டணியில் இணைவது சம்பந்தமாக சுதந்திரக்கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் தனித்தனியாக ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் பேசப்படுகிறது.

எதிர்கால அரசியல் நடவடிக்கைகளின் போது முக்கியமான தருணத்தில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த இந்த அணியினர் உறுதியாக புதிய கூட்டணியில் இணைந்துக்கொள்வார்கள் எனவும் அரசியல் தரப்பில் பேசப்பட்டு வருகிறது.