இரவில் ஜனாதிபதியை சந்தித்த முரளிதன்

Report Print Steephen Steephen in அரசியல்
395Shares

அரசியல் விவகாரங்கள் சம்பந்தமாக விசேட அக்கறையுடன் செயற்பட்டு வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் கடந்த புதன் கிழமை இரவு விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.

தனிப்பட்ட ரீதியில் நடந்ததாக கூறப்படும் இந்த சந்திப்பில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மலையக வாக்குகள் கையாளப்படும் விதம் தொடர்பான விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு தொடர்பான கோரிக்கையை நிறைவேற்றுமாறு முரளிதரன், ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த கோரிக்கையை நிறைவேற்றினால், ஜனாதிபதி மலையகத்தில் சாதகமான பதில் கிடைக்க தான் தலையீடுகளை மேற்கொள்வதாகவும் முரளிதரன் கூறியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

முரளிதரனின் இந்த கோரிக்கை தொடர்பாக தலையீடுகளை மேற்கொள்வதாக ஜனாதிபதி பின்னர் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.