அரசாங்கத்தில் வெளியேற நேரிடும்! ரணிலுக்கு தமிழ் அமைச்சர் ஒருவர் எச்சரிக்கை

Report Print Steephen Steephen in அரசியல்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வுகாண அரசாங்கம் உடனடியான தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என்றால், அரசியல் தீர்மானம் ஒன்றை எடுக்க நேரிடும் என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

ஹட்டன் பிரதேசத்தில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களின் வாக்குகளை மாத்திரம் எதிர்பார்ப்பது போதுமானதல்ல. தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கின்றேன்.

தொழிலாளர்களின் சம்பள பிரச்சினையில் அரசாங்கத்தினால், தலையிட முடியாது எனில், தோட்டத் தொழிலாளர்களின் வாக்குகளை மட்டுமே ஏன் பெற்றுக்கொள்ள வேண்டும். இதனால் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பை எந்த வகையிலாவது மேற்கொள்ள வேண்டும்.

வரவு செலவுத் திட்டத்திலாவது தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும். இந்த பிரச்சினைக்கு எந்த பதிலாது கிடைக்கவில்லை என்றால், அரசியல் தீர்மானம் ஒன்றை எடுக்க நேரிடும் எனவும் அமைச்சர் பழனி திகாம்பரம் குறிப்பிட்டுள்ளார்.