விரைவில் ஊடகத்துறை அமைச்சராக ருவான் விஜேவர்த்தன நியமிக்கப்படுவார்!

Report Print Gokulan Gokulan in அரசியல்
106Shares

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன, ஊடகத்துறை அமைச்சராக, நியமிக்கப்படவுள்ளார் என்று கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இதற்கான பரிந்துரையை ஏற்கனவே பிரதமர் ரணில் விக்ரமசிங்க எமது நாட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைத்துள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது, ஊடத்துறை அமைச்சராகவும், நிதியமைச்சராகவும் மங்கள சமரவீர பதவி வகிக்கிறார். அவரிடம் இருந்து ஊடகத்துறை அமைச்சு மீளப் பெறப்பட்டு, ருவான் விஜேவர்த்தனவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

அமைச்சரவையில் அங்கம் வகிக்காத அமைச்சராக ருவான் விஜேவர்த்தன ஊடகத்துறை அமைச்சைப் பொறுப்பேற்றவுள்ளார்.

ருவான் விஜேவர்த்தன ஐக்கிய தேசியக் கட்சியின் துணைப் பொதுச்செயலராக அண்மையில் நியமிக்கப்பட்டார்.

இதன் பின்னர், அனைத்து ஊடக நிறுவனங்களும் ருவான் விஜேவர்த்தனவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படவுள்ளன எனவும் தகவல் வெளியாகியுள்ளன.