விடுதலைப் புலிகள் செய்த படுகொலைகளை ஆவணப்படுத்தும் சி.வி.விக்னேஸ்வரன்?

Report Print Murali Murali in அரசியல்

வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், விடுதலைப் புலிகள் சகோதர படுகொலை செய்தமையை ஆதாரப்பூர்வமாக ஆவணப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“அண்மையில் இடம்பெற்ற ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் மாநாட்டின் போது புத்தகம் ஒன்று வெளியிட்டப்பட்டது.

குறித்த புத்தகத்தில் விடுதலைப் புலிகள் சகோதர படுகொலை செய்தார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறிந்துகொண்டேன்.

அந்த புத்தகத்தினை வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டு வைத்துள்ளார்.

இந்நிலையில், விடுதலைப் புலிகள் சகோதர படுகொலை செய்தமையை ஆதாரப்பூர்வமாக ஆவணப்படுத்தும் செயற்பாடுகளில் விக்னேஸ்வரன் ஈடுபட்டுள்ளதாக” அவர் மேலும் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த மாநாட்டில் கலந்துகொண்டிருந்த போதிலும், இதன் போது எந்தவொரு புத்தகத்தையோ, ஆவணங்களையோ வெளியிட்டு வைக்கவில்லை என சி.வி.விக்னேஸ்வரன் அண்மையில் மறுப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.