சட்டவிரோத மதுபானம் இருந்தால் அதற்கான பொறுப்பினை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏற்க வேண்டும்

Report Print Kamel Kamel in அரசியல்
166Shares

குறித்த ஓர் பொலிஸ் பிரிவிற்குள் சட்டவிரோத மதுபானம் இருந்தால் அதற்கான பொறுப்பினை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலனறுவையில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

கிராமிய மக்களின் ஏழ்மை நிலைமை அதிகரிப்பதற்கு ஏதுவாகியுள்ள சட்டவிரோத மதுபான பயன்பாட்டை முற்று முழுதாக இல்லாதொழிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எதிர்வரும் நாட்களில் எடுக்கப்படும்.

தங்களது பிரிவில் சட்டவரோத மதுபானம் இருந்தால் அதற்கான பொறுப்பினை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும், பொலிஸ் அத்தியட்சகருமே ஏற்றுக்கொள்ள வேண்டும். இது தொடர்பிலான சுற்று நிருபமொன்று எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்படும்.

நல்ல குடும்ப வாழ்க்கை, நல்ல சமூகமொன்றை கட்டியெழுப்புதல் மற்றும் இளம் சந்ததியினருக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கி கொடுத்தல் மற்றும் சட்டவிரோத மதுபான பயன்பாட்டையும் எனது ஆட்சிக் காலத்தில் இல்லாதொழிப்பேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சூளுரைத்துள்ளார்.