இந்தியாவின் முக்கிய தலைவர்களுடன் மஹிந்த! இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்கான சமிக்ஞையா?

Report Print Vethu Vethu in அரசியல்

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ஒருவருக்கு இணையான வரவேற்பினை மஹிந்தவுக்கு இந்திய அரசாங்கம் வழங்கியுள்ளதாக தெரிய வருகிறது.

எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த, இந்தியாவின் உயர்மட்ட அரசியல் பிரமுகர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் எச். டி. தேவ கவுடாவை, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்று சந்தித்திருந்தார்.

இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான சமகால அரசியல் நிலவரம் குறித்து பேசப்பட்டதாக தெரிய வருகிறது.

அதேவேளை கர்நாடாகவின் துணை முதல்வர் பரமேஸ்வராவையும் மஹிந்த தலைமையிலான குழுவினர் இன்று சந்தித்து பேசினர்.

எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்ற மஹிந்த முதலாவது விஜயமாக இந்தியா சென்றுள்ளார். இதன்போது அவருக்கு இந்திய அரசியல் மட்டத்தில் மகத்தான வரவேற்பு கிடைத்துள்ளது.

தற்போது மஹிந்தவுக்கு வழங்கப்பட்டுள்ள சாதகமான சமிக்ஞைகள் அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலின் போது, மஹிந்தவுக்கு ஆதரவாக இந்திய அரசாங்கம் செயற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.