ஜனாதிபதி தேர்தல் குறித்து மைத்திரி வெளியிட்டுள்ள தகவல்!

Report Print Murali Murali in அரசியல்

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவது உறுதியானதாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் சட்ட ரீதியாக எழுந்துள்ள பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

பொலன்னறுவையில் இன்று முற்பகல் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“ஜனாதிபதி தேர்தல் உரிய காலத்தில் இடம்பெறும் என்றாலும் சிலர் கூறுவது போன்று அதனை பலவந்தமாக நடாத்துவதற்கு எவருக்கும் முடியாது.

நாட்டின் எதிர்கால நலனுக்காக பல்வேறு தீர்மானங்களை மேற்கொள்ள கடந்த நான்கு வருட காலப்பகுதியில் ஜனாதிபதி என்ற வகையில் தான் நடவடிக்கை எடுத்துள்ளேன்.

இன்று பாரிய சமூக சவாலாக மாறியிருக்கும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றங்களை தடுப்பதற்காக முன்னெடுக்கப்படும் விரிவான நிகழ்ச்சித் திட்டத்திற்கு தான் முக்கியத்துவமளித்து வருகின்றேன்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

Latest Offers