செல்வாநகர் மக்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர்!

Report Print Yathu in அரசியல்

கிளிநொச்சி - செல்வநகர் மக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டக்களஸ் தேவானந்தா ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்றைய தினம் மேற்கொண்ட மக்கள் சந்திப்பில் குறித்த பிரதேசத்தில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கருத்து தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தமது சுயநலனை கருதியே செயற்படுவதாக தெரிவித்திருந்தார். தமிழ் தலமைகளும் அவ்வாறே செயற்பட்டு வருவதாக தெரிவித்த அவர் அரசு சுயநலத்துடன் செற்படுவதாக தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அரசுடன் இணைந்தே செயற்படுவதாகவும், எந்தவொரு நாட்டிலும் அரசுடன் எதிர் கட்சியினர் ஆதரவு கொடுத்து செயற்பட்ட வரலாறு கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.

Latest Offers