தமிழர் விடுதலைக் கூட்டணியின் விசேட கலந்துரையாடல்!

Report Print Yathu in அரசியல்

தமிழர் விடுதலைக் கூட்டணியின் விசேட கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையில் இன்று இடம்பெற்றுள்ளது.

குறித் கலந்துரையாடல் ஆனைக்கோட்டை, உயரப்புலம் பாரதி சனசமுக நிலைய மண்டபத்தில், பிரதேச சபை உறுப்பினர் அ.கேதுசன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

கூட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் இலண்டன் கிளையின் இணைப்பாளர் ச.அரவிந்தன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிர்வாக செயலாளர் இரா.சங்கையா, இளைஞர் அணி செயலாளர் ந.மதி அழகராசா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பெண்கள் தலைமைத்துவம் வகிக்கும் குடும்பங்களுக்கான வாழ்வாதாரம் தொடர்பில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

இதில் சனசமுக நிலைய செயலாளர் பகீரதன் பெண்களின் தேவைகளை எடுத்துரைத்ததுடன், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பிலும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பெண் தலமைத்துவ குடும்பங்களிற்கு எவ்வாறான வாழ்வாதார திட்டங்களை முன்னெடுப்பது என்பது தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.