உலகில் முதன்முதல் தோன்றிய மனிதன் இலங்கையிலே பிறந்தான்!

Report Print Nesan Nesan in அரசியல்

உலகில் முதன்முதல் தோன்றிய மனிதன் இலங்கையிலே பிறந்தான் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

உலகில் முதன்முதல் தோன்றிய மனிதன் இலங்கையிலே பிறந்தான். அந்தவகையில் தமிழர்களாகிய நாங்கள் பெருமைகொள்ள வேண்டும்.

தமிழ் மொழி என்பது பூர்வீகம்கொண்ட முதுமையான செம்மொழியாக இருந்து வருகின்றது.

தமிழ் மொழியினை பல உலகநாடுகள் பேணி கடைப்பிடித்து வருகின்றமை ஏன்? எனில் உலகில் தோன்றிய மொழிகளில் தமிழ் மொழி முதன்மையானது.

மேலைத்தேய நாடுகளில் தமிழ் மொழியும் கலாசாரங்களும் இப்பொழுது பரவிக்காணப்படுவதோடு பேணி கடைப்பிடித்து வருவதற்கான காரணி உலகில் தோன்றிய மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி என்பதனலாகும்.

தமிழர்கள் தமிழ் பேசுகின்ற மக்கள் ஒவ்வொருவரும் தமிழர் மரபினை சரியாக கடைப்பிடிக்க வேண்டும். தமிழ் மொழியின் தொன்மையை உணர்ந்து சரியாக பாதுகாக்க வேண்டும்.

கல்முனை பிரதேசத்தில் பிரதேசவாழ் மக்கள் மிகவும் வேண்டிநிற்கின்ற, கடந்த காலங்களில் செயற்பட்டிருக்க வேண்டிய, முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் பல இருக்கின்றன.

அந்தவிடையத்தில் ஒட்டுமொத்தமாக கல்முனை பிரதேசத்தில் வாழுகின்ற தமிழ் மக்களின் ஏக வேண்டுகோளாக இருப்பது கல்முனை தமிழ் பிரதேச செயலகம் என்ற வார்த்தையே.

கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தப்பட வேண்டிய கடமைப்பாடு இருக்கின்றது.

கல்முனை தமிழ் பிரதேச செயலகம் ஒரு சிறந்த பிரதேச செயலகமாக நிச்சயம் குறிப்பிட்ட காலத்திற்குள், குறிப்பிட்ட மாதத்திற்குள் தரமுயர்த்தப்படுமென்ற அந்த நல்ல கருத்தினை இந்த இடத்திலே தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.எங்களது நீண்டகால கோரிக்கையாக இருக்கின்ற கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தின் தரமுயர்த்தி கல்முனை பிரதேச வாழ் தமிழ் மக்களின் நீண்டநாள் கனவு நிறைவேற்றித்தரப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து இரண்டு மில்லியன் ரூபாய் கார்மேல் பற்றிமா கல்லூரியின் மைதானத்தின் புனரமைப்பு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதாக கருத்தினை பகிர்ந்துகொண்டார்.

இந் நிகழ்விற்கு கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.