துரதிர்ஷ்டவசமாக ஜனாதிபதி தேர்தலில் என்னால் போட்டியிட முடியாது!

Report Print Murali Murali in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் துரதிஷ்டவசமாக தன்னால் போட்டியிட முடியாது என எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சிறந்த வேட்பாளர் ஒருவரை நிறுத்தி வெற்றி பெற்றதன் பின்னர் தான் அரசமைப்பில் மாற்றங்களை கொண்டுவருவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா சென்றுள்ள அவர் பெங்களுரில் வைத்து இந்து நாளிதழிற்கு வழங்கிய நேர்காணலிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

சிங்களவர்களிற்கு முதல் தமிழ் சமூகத்தவர்களே இந்திய அமைதிப்படையினரை எதிர்த்தனர்.அவர்களே முதலில் பிரச்சினையை எதிர்கொண்டமையே இதற்கு காரணம்.

இந்தியா மற்றும் இலங்கைக்கிடையிலான பிரச்சினை சர்வதேச மயப்படுத்தப்பட்டது. மேலும் யுத்தம் தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள சந்தேகங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,

மக்களை திருப்தியடையச் செய்யலாம் என்ற போதிலும் அரசியல்வாதிகள் திருப்தியடையமாட்டார்கள் எனவும் அதுவே தனது பிரச்சினை எனவும் குறிப்பிட்டுள்ளார்.