ஜனாதிபதியின் விமர்சனம் கவலையை ஏற்படுத்தியுள்ளது! தீபிகா உடகம

Report Print Gokulan Gokulan in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு மீது முன்வைத்த குற்றச்சாட்டுகள் மற்றும் அநியாயமான விமர்சனங்களால் ஆழ்ந்த கவலை அடைந்திருப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிகா உடகம தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் ஜனாதிபதிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி சிறிசேன,

மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றிய இரண்டு இலங்கை படையினர் கொல்லப்பட்டமைக்கு இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தாமதமான செயற்பாடே காரணம்.

அகுணகொல பெலஸ்ஸ சிறைச்சாலையில் சிறப்பு அதிரடிப்படையினரை பாதுகாப்பில் ஈடுபடுத்த எடுத்த நடவடிக்கையை மனித உரிமை ஆணைக்குழு தடுத்து விட்டதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

இதுகுறித்து, ஜனாதிபதிப்பு கலாநிதி தீபிகா உடகம அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில், அநியாயமான விமர்சனங்களால் மனச்சோர்வு அடைந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.