ஜனாதிபதியை, சபாநாயகர் விமர்சனம் செய்ய முடியாது

Report Print Kamel Kamel in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, சபாநாயகர் கரு ஜயசூரிய விமர்சனம் செய்ய முடியாது என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்து கொண்டு நாட்டின் ஜனாதிபதியை விமர்சனம் செய்ய கரு ஜயசூரியவிற்கு உரிமையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வார இறுதி ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் மஹிந்த ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட கருத்தொன்று தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் எந்தவொரு உறுப்பினருக்கும் விமர்சனங்களை வெளியிட அதிகாரம் உண்டு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், சபாநாயகர் என்ற பதவியை வகிக்கும் கரு ஜயசூரிய அவ்வாறு ஜனாதபிதியை விமர்சனம் செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் அமைப்பு பேரவை தொடர்பில் அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்து குறித்து சபாநாயகர் நாடாளுமன்றில் விமர்சனங்களை வெளியிட்டிருந்தார்.

உன்னதமான நாடாளுமன்றின் சபாநாயகர் பதவி மலினப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் ஜனாதிபதி தொடர்பில் முன்வைத்த விமர்சனம் ஹன்சார்டிலிருந்து நீக்கப்படும் என எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.