மஹிந்தவுடன் இணைவதில் தீவிரம் காட்டுகிறார் மைத்திரி

Report Print Ajith Ajith in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியையும், பொதுஜன பெரமுனவையும் இணைக்கும் செயற்பாடுகளில் மீண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.

கடந்த புதன்கிழமையன்று இது தொடர்பான சந்திப்பு ஒன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வலுவான ஒருவரை வேட்பாளராக போட்டியிட வைக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

இதில் மஹிந்த ராஜபக்சவின சார்பில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.திஸாநாயக்க மற்றும் முன்னாள் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இதன்போது கிராம மட்டத்தின் வாக்குகள் உட்பட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பேசப்பட்டுள்ளன. எனினும் புதிய தீர்மானங்கள் எவையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் இந்தியா சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாடு திரும்பியதும் எதிர்வரும் பெப்ரவரி 18ஆம் திகதிக்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகியவற்றின் கூட்டமைப்பு தொடர்பில் முடிவு ஒன்றை எடுப்பதற்கு இந்த சந்திப்பின்போது முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest Offers