மதுஷ் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டால் அரசியல்வாதிகள் அவரை காப்பாற்றுவார்கள்

Report Print Steephen Steephen in அரசியல்

மாகந்துரே மதுஷ் என்ற பாதாள உலகக்குழு தலைவர் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டால், நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் சட்டத்தை சரியாக செயற்படுத்த இடமளிக்க மாட்டார்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

மாவனெல்லையில் நேற்று நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் தொகுதி அமைப்பாளர்கள் கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாகந்துரே மதுஷூடன் கொடுக்கல், வாங்கலில் ஈடுபடும் அரசியல்வாதிகள் யார் என்பதை முழு நாடும் பார்த்தது. தென் பகுதியை சேர்ந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மதுஷூடன் தொடர்புகளை பேணியுள்ளனர்.

மதுஷூடன் தொடர்பில் இருக்கும் அரசியல்வாதிகள் யார் என்பதை அறிவிக்குமாறு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினோம். இதனை வெளியிட்டால், போதைப்பொருள் விற்பனையின் பின்னணியில் இருக்கும் அரசியல்வாதிகள் யார் என்பதை மக்கள் அறிந்து கொள்ள முடியும்.

மதுஷூக்கு எதிராக சட்டம் சரியாக முறையில் அமுல்படுத்தப்படுமா என்பது எம்மால் கூற முடியாது. இதற்கு முன்னர் நாட்டில் பெரியளவில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்களுக்கும் சட்டம் சரியாக அமுல்படுத்தப்படவில்லை என்பது எமக்கு தெரியும்.

குற்றவாளிகள் நழுவி சென்றனர். மதுஷ் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டால், இதே நிலைமையே ஏற்படும். மதுஷ் சம்பந்தமாக துபாய் நாட்டில் வழங்கப்படும் தண்டனை இலங்கையில் வழங்கப்படும் தண்டனையை விட சிறந்தது.

அவர் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட அவரை காப்பாற்ற இலங்கை பல அரசியல்வாதிகள் இருக்கின்றனர்.

மதுஷ் மட்டுமல்ல, நாட்டில் உருவான சொத்தி உபாலி போன்ற குற்றவாளிகளில் இருந்து போதைப்பொருள் கடத்தல்காரர்கள் உட்பட பாதாள உலகக்குழுவினரை உருவாக்கி, அனுசரணையும் பாதுகாப்பு வழங்கியவர்கள் நாட்டின் அரசியல்வாதிகள்.

மக்கள் விடுதலை முன்னணி ஆட்சிக்கு வந்தால், இவை அனைத்தையும் நிறுத்துவோம். போதைப்பொருள் விற்பனையை ஒழிப்பது கடினமாக காரியமல்ல. மக்கள் சிறப்பாக வாழ சமூகத்தில் சிறந்த பொருளாதார சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் எனவும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers