தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக சுமந்திரன் எம்.பி நியமனமா?

Report Print Vethu Vethu in அரசியல்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடுத்த தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை நியமிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடுத்த மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த யோசனையை முன்வைக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சமகால தலைவர் ஆர்.சம்பந்தன் நோய்வாய்ப்பட்டுள்ளமையினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய சம்பந்தனை கட்சியின் ஆலோசகராக நியமிப்பதற்கு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்களின் அடிப்படையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.