ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சரித்திரம் படைக்கும்

Report Print Mubarak in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்வருகின்ற எந்த தேர்தலாக இருந்தாலும் சரித்திரம் படைக்கும் என ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளரும், திருகோணமலை மாவட்டத்தின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயந்த விஜேசேகர தெரிவித்துள்ளார்.

திருகோணமலை ,கந்தளாய் நகரில் இன்று ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் அலுவலகம் திறந்து வைக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

திருகோணமலை மாவட்டத்தில் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து மற்றும் விவசாயம் போன்றன வளர்ச்சியடைந்து வரும் நிலையில் கட்சிகளுக்கான மும்முனை போட்டிகளும் விசாலமாக நடைபெற்று வருகின்றது.

கந்தளாயில் கூடிய விரைவில் எமது அரசாங்கம் கந்தளாய் சீனித் தொழிற்சாலையை ஆரம்பிப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் காலத்தில் இல்லாமல் செய்யப்பட்ட சீனித்தொழிற்சாலையில் எத்தனை இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க முடியும் அந்த வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

எதிர்வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஜனாதிபதி வேட்பாளர் யாரென்பதை ஜனாதிபதியே தீர்மானிப்பர் இதனை நாட்டிலுள்ள வேறு கட்சிகளின் முக்கியஸ்தர்கள் குழம்பிக்கொள்ள தேவையில்லை.

திருகோணமலை மாவட்டம் ஜனாதிபதியின் கண்காணிப்பின் கீழ் பல மில்லியன் ரூபாய் செலவில் வீதிகள்,சிறு வீதிகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. இம்மாவட்டத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு ஜயந்திபுர, சூரியபுர போன்ற பகுதிகளில் நான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது பெற்றுக்கொடுத்துள்ளேன்.

திருகோணமலை மாவட்டத்திலுள்ள விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பேன் முடியாத பட்சத்தில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் இம் மாவட்டத்தில் என்னால் பல்வேறு வகையான அபிவிருத்தி சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன் அதனை ஒரு போதும் இம்மாவட்ட மக்கள் மறந்து விடமாட்டார்கள்.

மீண்டுமொரு மாகாண சபை தேர்தலோ அல்லது ஜனாதிபதி தேர்தலோ வரும் பட்சத்தில் சுதந்திரக் கட்சியின் ஆதிக்கம் வளர்ச்சியடையும் மாற்றுக் கட்சிகளின் தேவைகள் ஏற்பட்டால் பொதுஜன பெரமுனையுடன் கூட்டுச் சேர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.

Latest Offers