தகுதியான வேட்பாளரை ஐ.தே.கட்சி நிறுத்தும்: நவீன் திஸாநாயக்க

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறக் கூடிய தகுதியான வேட்பாளரை ஐக்கிய தேசியக் கட்சி நிறுத்தும் என பெருந்தோட்ட கைத்தொழில் துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

வலப்பனையில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றிய அமைச்சர், ஐக்கிய தேசியக் கட்சி என்பது ஒரு குடும்பத்திற்கு மட்டுமே உரித்தான கட்சியல்ல எனவும் கூறியுள்ளார்.

2019 ஆம் ஆண்டு பாரிய மாற்றங்களை ஏற்படும் ஆண்டு. இந்த ஆண்டுக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டு, அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் புதிய ஜனாதிபதி ஒருவர் பதவியேற்பார். நாட்டில் அதிகார போராட்டம் நடக்கின்றது. சதித்திட்டங்கள் தீட்டப்படுகின்றன.

எனினும் ஐக்கிய தேசியக் கட்சி மிகவும் வலுவாக உள்ளது. எமது கட்சியில் வெற்றி பெறக் கூடிய வேட்பாளர்கள் இருக்கின்றது.

எமது கட்சியில் இருப்பவர்கள் நாட்டின் நலன்களுக்காவே பணிகளை செய்வார்கள் எனவும் நவீன் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.