அகதேசிய முற்போக்கு கழகத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு

Report Print Theesan in அரசியல்

வவுனியாவில் அகதேசிய முற்போக்கு கழகம் எனும் புதிய கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

வவுனியா, பண்டாரிக்குளத்தில் இன்று இந் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இக் கழகம் வடக்கு மற்றும் கிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஒன்றியமாக இயங்கிவந்த நிலையில் இன்று அகதேசிய முற்போக்கு கழகம் எனும் கட்சியாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

இதன் போது கட்சியின் கொள்கைகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும், வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஒன்றியத்தின் தலைவரும், கட்சியின் தற்போதைய தலைவருமான எம்.பி.நடராஜாவினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலின் போது வடக்கு மற்றும் கிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஒன்றியமானது மீன் சின்னத்தில் போட்டியிட்டு இரு உறுப்பினர்களை பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.