அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்றால் தேர்தலை நடத்துங்கள்: ரில்வின் சில்வா

Report Print Steephen Steephen in அரசியல்

அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்றால், உடனடியாக பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் பேருவளை தொகுதியின் அதிகார சபைக் கூட்டத்தில் இன்று கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு தேவையான வகையில் மீண்டும் தேசிய அரசாங்கத்தை அமைக்க இடமளிக்க போவதில்லை.

அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாத காரணத்தினால், அரசாங்கம் மீண்டும் தேசிய அரசாங்கத்தை அமைக்க முயற்சித்து வருகிறது. இதற்காக அரசியலமைப்புச் சட்டத்தில் ஓட்டைகளை அரசாங்கம் தேட ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்

இதனிடையே ஒவ்வொருவருக்கும் தேவையான வகையில் தேர்தலை நடத்த அரசாங்கம் தயாரில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

Latest Offers