வரி அறவீடுகளை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம்: பந்துல குணவர்தன

Report Print Steephen Steephen in அரசியல்

வரி அறவிடுகளை அதிகரிப்பதை தவிர வருமானத்தை பெற்றுக்கொள்ள தற்போதைய அரசாங்கத்திற்கு எந்த வேலைத்திட்டங்களும் இல்லை எனவும் இம்முறை வரவு செலவுத்திட்டத்தின் மூலம் வரி வருமானத்தை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாக இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் ஆயிரம் பில்லியனாக இருந்த வரி வருமானத்தை தற்போதைய அரசாங்கம் இரண்டாயிரம் பில்லியனாக 100க்கு 100 வீதம் அதிகரித்துள்ளது.

2019 ஆம் ஆண்டுக்கான கணக்கீட்டு சட்டமூலம் அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டுக்கு 2 ஆயிரத்து 232 பில்லியன் நிதியை பெற்றுக்கொள்ள அந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியை திரட்ட வரி மற்றும் வரி அல்லாத வகையில் அரச வருமானத்தை திரட்ட வேண்டும். வரவு செலவுத் திட்டம் சமர்பிக்கப்படும் மார்ச் மாதம் 5 ஆம் திகதியே நிதியமைச்சர் வருமானம் பெறும் யோசனை முன்வைக்க உள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இந்த அரசாங்கம் நேரடி மற்றும் மறைமுக வரிகள் மூலமே அரச வருமானத்தை பெற்று வருகிறது. இதற்காக வரி அறவீடுகளை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது.

வரி அறவீடு தொடர்பாக இந்த அரசாங்கம் இலங்கை வரலாற்றில் எந்த அரசாங்கமும் நிகழ்த்தாத சாதனையை நிகழ்த்தி வருகிறது எனவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers