புலிகளின் தலைவர் பிரபாகரனின் தலைமைத்துவ பண்பு வேறு யாரிடமும் இல்லை

Report Print Mohan Mohan in அரசியல்

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தலைமைத்துவப் பண்பு இதுவரை எந்த தலைவர்களிடமும் இல்லை என தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு வற்றாப்பளை பகுதியில் இன்று பிற்பகல் தமிழர் விடுதலை கூட்டணியின் மாவட்ட செயல் குழு தெரிவு கூட்டம் இடம்பெற்றுள்ளது.

குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தலைமை பலமுடைய தகுதிபெற்றவர். அவர் போன்று ஒரு தலைவர் சமகாலத்தில் இல்லை.

விடுதலைப் புலிகளின் காலத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திலும் ஏனைய பிரதேசங்களிலும் பல்வேறு தரப்பினர் தமது சுயசேவைக்காக பல்வேறு வன்முறை தாக்குதல்களை செய்தனர்.குறிப்பாக பல்வேறு படுகொலைகளை செய்தனர்.

ஆனால் அவை அனைத்தும் விடுதலைப் புலிகளின் அமைப்பின் தலைமையின் கட்டளைக்கு அமைவானது என்று குற்றம்சாட்டினர்.

எனினும் அது அவர் செய்தார், இவர் செய்தார், எனக்கு தெரியாது என்று பிரபாகரன் தட்டிக்கழிக்கவில்லை. குற்றம் தொடர்பில் ஆராய்வதாகவே அவர் தெரிவித்திருந்தார்.

இவ்வாறான தலைமைத்துவ பண்பு இதுவரை எந்த தலைவர்களிடமும் காணப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.