எம்ஐ 17 ஹெலிகொப்டர்களை கொள்வனவு செய்கிறது இலங்கை

Report Print Ajith Ajith in அரசியல்

ரஸ்யாவில் இருந்து எம்ஐ 17 ரக புதிய வகை ஹெலிகொப்டர்களை கொள்வனவு செய்ய இலங்கை பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.

ரஸ்யாவுக்கான இலங்கையின் தூதர் தயான் ஜயதிலக்க இதனை ரஷ்யாவில் வைத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பேச்சு நடத்த இலங்கையின் பாதுகாப்பு அதிகாரிகள் கடந்த செப்டம்பரில் ரஸ்யாவுக்கு விஜயம் செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் இதுவரை ஆவணங்கள் எதிலும் கையொப்பங்கள் இடப்படவில்லை. ஏற்கனவே இலங்கை 1990 காலப்பகுதிகளில் எம்ஐ 17 ஹெலிகொப்டர்களை கொள்வனவு செய்தது.

இந்தநிலையில் உலகின் 100 மேற்பட்ட நாடுகளும் எம்ஐ 17 ஹெலிகொப்டர்களை கொள்வனவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers