இந்த ஆண்டு நாட்டில் குடி நீர் பிரச்சினைக்கு முழு தீர்வு எடுக்கப்படும்!

Report Print Mubarak in அரசியல்

இவ்வாண்டில் நாட்டில் குடி நீர் பிரச்சினையின் தீர்வு முழுமையாக அனைத்து மக்களுக்கும் கிடைக்கக் கூடிய வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கண்டி - குண்டசாலை பகுதியில் வாவின்ன குடிநீர்திட்டத்தை மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

இன்று நாட்டில் கட்சிகளுக்கிடையே ஜனாதிபதி தேர்தலுக்கு யார் வேட்பாளர், மாகாண சபை தேர்தலுக்கு யார் முதலமைச்சர் வேட்பாளர் என்ற நோக்கிலே எதிர்பார்ப்புகள் பேசப்பட்டு வரும் நிலையிலே நமது அமைச்சு மக்களின் பிரச்சினைகளிலும், சேவைகளிலும் கண்ணும் கருத்துமாக இருந்து கொண்டிருக்கின்றது.

நாட்டில் நாலா பக்கங்களிலும் விஜயம் மேற்கொண்டு மக்களின் குறைகளை நிவர்த்தி செய்து வருகின்றோம். குறைபாடுகளை கேட்டறிந்து அதற்கான வழிகளை ஏற்படுத்தி வருகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந் நிகழ்வில் அதிகாரிகள், அரசியல்வாதிகள், கட்சி ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.