மஹிந்தவின் கோட்டைக்குள் சுட்டுக் கொல்லப்பட்டவர் யார்? பொலிஸார் வெளியிட்ட தகவல்

Report Print Rakesh in அரசியல்

அம்பாந்தோட்டை மாவட்டம், தனமல்வில பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நேற்று மதியம் 12.20 மணியளவில் இந்தத் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரு மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களினால் இருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 42 வயதுடைய சுதுஹகுரு சுமித் எனும் வசந்த என்பவரே உயிரிழந்துள்ளார்.

அத்துடன் சம்பவத்தில் காயமடைந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவர் அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த நபர் நான்கு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Latest Offers