போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு மறைமுகமாக உதவும் ரணில்

Report Print Rakesh in அரசியல்

நாட்டை சீரழித்துக் கொண்டிருக்கும் போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், அவரின் சகாக்களும் மறைமுகமாக உதவுகின்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உள்நாட்டில் இருக்கும் போதைப்பொருள் வர்த்தகர்களுக்கும், வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் வர்த்தகர்களுக்கும் ரணில் அரசு உதவிகளை வழங்கி வருகின்றது. இது ஜனாதிபதிக்கும் தெரிந்த விடயம்.

எனவே, போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு எதிராகவும் அவர்களுக்குப் பக்கபலமாகவும் இருக்கும் அரச தரப்பினருக்கு எதிராகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாமதிக்காமல் நடவடிக்கைளை எடுக்கவேண்டும்.

மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு முடிவு கட்டப்பட்டிருந்தது. பாதாள உலகக் கோஷ்டியினரின் கொலை வெறியாட்டங்களும் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன.

ஆனால், 2015ஆம் ஆண்டுக்குப் பின் நாட்டில் மீண்டும் போதைப்பொருள் வர்த்தகத்துக்கும் பாதாள உலக கோஷ்டியினரின் கொலை வெறித்தனங்களுக்கும் ரணில் அரசு புத்துயிர் கொடுத்துள்ளது. இதற்கு உடன் முடிவு கட்டப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.