கோத்தபாய தொடர்பில் விசேட நீதிமன்றத்தின் உத்தரவு

Report Print Vethu Vethu in அரசியல்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் கோரிக்கையை நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

டீ.ஏ.ராஜபக்ஷ நினைவக நிர்மாணிப்பு தொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டாம் என கோத்தபாய ராஜபக்ச சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

எனினும் இந்த கோரிக்கையை மூன்று நீதிபதிகள் அடங்கிய விசேட நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.

டீ.ஏ. ராஜபக்ஷ அருங்காட்சியகத்தை நிர்மாணிப்பதற்கு அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பில் முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுக்கப்படுமாறு விசேட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டீ.ஏ.ராஜபக்ஷ நினைவு அருங்காட்சிய நிர்மாணிப்பின் போது 33 மில்லியன் ரூபாய் முறைக்கேடாக பயன்படுத்தப்பட்டுள்ளமை உள்ளிட்ட பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் 7 குற்றப்பத்திரங்களை சட்ட மா அதிபர் தாக்கல் செய்துள்ளார்.

இது குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது கோத்தபாய சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கோரிக்கையை, நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.