மாகாண தேர்தலா? அதிபர் தேர்தலா?

Report Print M.M.Nilamdeen M.M.Nilamdeen in அரசியல்

மாகாண தேர்தலை நடத்துவது என்பது அதிபர் மைத்திரியின் நிலைப்பாடு ஆனால் அதிபர் தேர்தலை நடத்துவது என்பது பிரதமர் ரணிலின் நிலைப்பாடு.

அதனால் மாகாண தேர்தலை நடத்துவது என்று சர்வக்கட்சி தலைவர்களை அழைப்பது, கூட்டுவது என்று நாட்களை கடத்துவது பிரதமர் ரணிலின் தந்திரம். இந்த தந்திரம் அடங்கிய செய்தி அதிபர் மைத்திரிக்கு ஒரு பிரிவு கொடுத்து விட்டது.

ஆனால், இந்த தந்திரத்தை உடைத்து மாகாண தேர்தலை நடத்துவது என்ற முடிவுக்கு அதிபர் மைத்திரி வந்துள்ளார். அதற்கான முழு வீச்சில் அதிபர் நகர்வுகளை செய்ய திட்டமிட்டுள்ளார்.

இலங்கையில் ஜனநாயகம் நிலை நாட்டப்பட வேண்டும் என்று மூக்கை நுழைத்த வெளிநாட்டு சக்திகள் மாகாண தேர்தலை நடத்துவதற்கு ரணிலுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற ஒரு நகர்வை அதிபர் இன்று முதல் நகர்த்தி வருகின்றார்.

இதேவேளை முன்னாள் அதிபர் சந்திரிக்கா, அதிபர் மைத்திரியை தோற்கடிக்கும் ஒரு நகர்வை செய்து வருகின்றார். அதற்காக முன்னாள் அமைச்சர் குமார வெல்கமவை அதிபர் தேர்தலில் களமிறக்கும் ஒரு நகர்வில் உள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ரணில் களமிறங்கும் முடிவில் இல்லை. அதாவது அதிபர் தேர்தலில் மஹிந்தவின் மொட்டுக் கட்சி சார்பாக யார் களமிறங்குவது? சுதந்திரக்கட்சியின் சார்பாக யார் களமிறங்குவது? என்ற நிலைப்பாடு வெளியாகும் போது தான் ரணிலின் நிலைப்பாடு வெளியாகும் என்ற ஒரு கதையும் உள்ளது.

மொட்டு அணியும், சுதந்திரக்கட்சியும் இணைந்து அதிபர் மைத்திரியை அதிபர் தேர்தலில் களமிறக்கும் ஒரு முடிவில் தான் மஹிந்த உள்ளதாக ஒரு செய்தியும் உள்ளது.

எது எப்படியோ மாகாண தேர்தல் இப்போது நடக்கும் அல்லது நடத்தும் வாய்ப்பு மிக அரிது. இருந்த போதும் பார்ப்போம்...