ஜனாதிபதி தேர்தலில் ஐ.தே.க சார்பில் களமிறங்கும் மிக பிரபலமான ஒருவர்

Report Print Jeslin Jeslin in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், மிகவும் பிரசித்தமான ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் வர இருக்கின்றார், அவர் பொது வேட்பாளராக இருப்பார் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணில் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த நபர் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்தவரா என்பதை அந்நேரத்திலேயே தீர்மானிப்போம், சென்ற முறையும் கடைசி நேரத்தில்தான் முடிவெடுத்தோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், வேறு ஒருவருக்கு வாய்ப்பு வழங்கமாட்டோம் என அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்திருந்தார், இது குறித்து அமைச்சர் ராஜித தெரிவிக்கும்போது,

வேறு ஒருவர் என்று எப்படி கூற முடியும், கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கினால், எல்லோரும் ஒன்றே, எல்லோரும் ஒன்றாகவே போட்டியிட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.