கொழும்பு துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர்

Report Print Gokulan Gokulan in அரசியல்

துறைமுகங்கள் கப்பல்துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க கொழும்பு துறைமுகத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

கொழும்பு துறைமுகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காகவும், ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காகவும் அவர் இன்று குறித்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது அமைச்சர், இலங்கை துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான ஜயபாலு முனையம், வேலை தளங்கள், மத்திய சமையலறை, தீ அணைப்பு நிலையம், களஞ்சியம், துறைமுக பொலிஸ், மக்கள் முனையம் உள்ளடங்கலாக துறைமுகத்தினுள் பல இடங்களிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இலங்கை துறைமுக அதிகாரசபையின் முகாமைத்துவ அத்தியட்சகர் அத்துல ஹெவாவித்தாரன, செயற்பாட்டு அத்தியட்சகர் ஜயந்த பெரேரா உள்ளடங்கலாக நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பலர் இவ்விஜயத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

Latest Offers