ஐ.தே.க.வில் அமைப்பாளராக சிங்கள பாடகர் நியமனம்

Report Print Ajith Ajith in அரசியல்

முன்னணி சிங்கள பாடகர் ரூக்காந்த குணதிலக்க, ஐக்கிய தேசியக்கட்சியின் தம்மதெனிய தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினரும், பிரதியமைச்சருமான லலித் திஸாநாயக்க, அரநாயக்க தொகுதி அமைப்பாளராக தெரிவாகியுள்ளார்.

திலின பண்டார தென்னக்கோன், பாத்ததும்பறை தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் பியசீலி ரட்நாயக்கவின் மகன் மஞ்சுள பண்டாரவாஸ், வாரியபொல தொகுதியின் ஐக்கிய தேசியக்கட்சி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜெயவர்த்தன நீர்கொழும்பின் ஐக்கிய தேசியக்கட்சி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.