அமைச்சர் மங்கள சமரவீரவின் தன்னிச்சையான செயற்பாட்டால் ஏற்பட்ட நஷ்டம்

Report Print Jeslin Jeslin in அரசியல்

சுங்க திணைக்கள ஊழியர்கள் மேற்கொண்டிருந்த போராட்டத்தினால் திணைக்களத்திற்கு ஏற்பட்ட நஷ்டத்தை அமைச்சர் மங்கள சமரவீரவே பொறுப்பேற்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மங்கள சமரவீரவின் தன்னிச்சையான நடவடிக்கையே இந்த நஷ்டத்திற்கு காரணம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers