பெற்றோலியம் மூலவள அபிவிருத்தி தொடர்பில் இந்தியாவும், இலங்கையும் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன.
அமைச்சர் கபீர் ஹாசிம், இந்தியாவின் அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
இந்தியாவில் இடம்பெறும் மாநாடு ஒன்றில் பங்கேற்றுள்ள அமைச்சர் கபீர் ஹாசிம், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பிலும் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.