12 பேரையும் மின்னுயர்த்தியில் விட்டு சாகடித்திருக்கலாம்: ரஞ்சன் ராமநாயக்க

Report Print Gokulan Gokulan in அரசியல்

நாடாளுமன்ற மின்னுயர்த்தியினுள் சிக்கிய 12 எம்.பிக்களையும் ஏன் காப்பற்றினார்கள் அதற்குள்ளேயே விட்டு சாகடித்திருக்கலாம் என்பதே மக்களின் எதிர்ப்பார்ப்பாகும் என நெடுஞ்சாலை வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கோப் குழு அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

நாடாளுமன்ற மின்னுயர்த்தியினுள் 12 எம்.பிக்கள் சிக்கிக்கொண்டமை தொடர்பில் இலங்கையில் மட்டுமின்றி உலக நாடுகள் வரை பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால், இங்குள்ள சமூக வளைத்தளங்களைப் பார்த்தால் நாடாளுமன்ற மின்னுயர்த்தியினுள் சிக்கிய 12 எம்.பி.க்களையும் ஏன் காப்பாற்றினார்கள்? அதற்குள்ளேயே விட்டு சாகடித்திருக்கலாம்.

வீணாக காப்பாற்றிவிட்டார்கள், மின்னுயர்த்தி செயலிழந்து நிற்காமல் அறுந்து விழுந்திருக்கலாம் என மக்கள் சபித்துள்ளனர்.

அத்துடன் தற்போது நாடாளுமன்றத்திலுள்ள 225 உறுப்பினர்களும் செத்தொழிய வேண்டுமென்பதே மக்களின் விருப்பமும் எதிர்ப்பார்ப்புமாகவுள்ளது. நாடாளுமன்றம் மீதும் தமது மக்கள் பிரதிநிதிகள் மீதும் அந்தளவுக்கு மக்கள் வெறுப்படைந்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பின்னால் சங்கிலி அறுப்பவர்களும், மணல் கொள்ளையர்களுமே இருக்கின்றனர். இவ்வாறான நிலையில் மக்கள் சபிக்காமல் என்னதான் செய்வார்கள்? இது ஒரு பயங்கரமான நிலைமையாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

Latest Offers