வடக்கு மக்களின் சவால்களை அறிந்துக்கொள்ள முடிந்தது: நோர்வே

Report Print Ajith Ajith in அரசியல்

தமது தூதுவரின் யாழ்ப்பாண விஜயத்தின்போது வடக்கின் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தெளிவாக கண்டறிய முடிந்ததாக நோர்வே தூதரகம் தெரிவித்துள்ளது.

அண்மையில் நோர்வேயின் தூதுவர் தொர்ப்ஜோன் கௌஸ்டாட்ஸ்தெர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த சுத்தமான வலு மற்றும் சுகாதாரம் என்ற தொனிப்பொருளிலான சர்வதேச மாநாட்டில் அவர் உரையாற்றினார்.

இதன்பின்னர் அவர் யாழ்ப்பாணத்தின் அரச அதிகாரிகளை சந்தித்து விரிவாக கலந்துரையாடினார்.

இதன்மூலம் வடக்கு மக்களின் சவால்களை அறிந்துக்கொள்ள முடிந்ததாக நோர்வே தூதரகம் தெரிவித்துள்ளது.

Latest Offers