உயர் நீதிமன்றமும் அரசியல் அமைப்புச் சபையும் நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக்கூற வேண்டும்!

Report Print Sinan in அரசியல்

உயர் நீதிமன்றமும் அரசியல் அமைப்புச் சபையும் நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக்கூற வேண்டும்.

அரசியல் அமைப்புச் சபைக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து ஆராய்வதற்கு நாடாளுமன்றத்தில் விசேட குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க முதலில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்கின்றார், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முதலில் மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்கின்றார்.

இது தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் தொடர்ந்தும் பதிலளிக்கையில்,

இவ் விடயம் தொடர்பில் பிரேரணை ஒன்றை கொண்டுவருவதற்கு தீர்மானித்துள்ளோம். இன்று இது தொடர்பில் அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கு சபாநாயகர் மாத்திரமே இருக்கின்றார்.

அவர் ஒப்பந்தங்களுக்கு அப்பால் சென்று அரசியல் அமைப்புச் சபையை பாதுகாக்கின்றார். சபாநாயகர், சபாநாயகர் என்பதால் அரசியல் அமைப்புச் சபையின் தலைவராக செயற்படுகின்றாரா? அல்லது அரசியல் அமைப்புச் சபையின் தலைவர் என்பதால் அவர் சபாநாயகராக செயற்படுகின்றாரா என்ற கேள்வி எமக்கு எழுகின்றது.

சபாநாயகர் என்பதாலேயே அவர் அரசியல் அமைப்புச் சபையின் தலைவராக செயற்படுகின்றார். ஆகவே அவர் எவ்வாறு அரசியல் அமைப்புச் சபையின் தலைவராக செயற்பட முடியும்? அது தொடர்பில் சட்டப்பிரச்சினையை எழுப்புவோம்.

தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தேர்தல் தோல்வியில் இருந்து எவ்வாறு தப்பித்துக்கொள்வது என பார்க்கின்றார். அவர்களுக்கு வாய்ப்பான தேர்தல் ஒன்றை நடத்திக்கொள்ள பார்க்கின்றார்கள்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் இருக்கின்றது. தற்போது நடத்த வேண்டியது மாகாண சபைத் தேர்தலையே. தேர்தலை ஒத்திவைப்பதற்கான அனைத்துப் பணிகளையும் அவர் மேற்கொண்டார்.

எனினும் தேர்தலை நடத்துமாறு கோரி ஜனாதிபதி அமைச்சரபை பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார். நாளைய தினம் அமைச்சரவையில் இது நிறைவேற்றப்படும் என குறிப்பிட்டுள்ளார்.