அரசாங்க ஊழியர்களிடம் ஜனாதிபதி விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

Report Print Vethu Vethu in அரசியல்

நாட்டிலுள்ள அனைத்து அரசாங்க ஊழியர்களிடமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

பொருளாதாரத்தில் திருப்புமுனையை ஏற்படுத்த அனைத்து அரசாங்க ஊழியர்களையும் ஒன்றிணையுமாறு அவர் கோரியுள்ளார்.

நாடு என்ற வகையில் பொருளாதார ரீதியாக நாம் மோசமான நிலைமைக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும். இந்த வருடம் தேர்தல் நடைபெறும் வருடமாக அமையவுள்ளது. இதன் காரணமாக அபிவிருத்தியும் மக்கள் சேவையும் ஒருபோதும் பாதிப்பு அடையக்கூடாது.

கிராமிய வறுமையை ஒழிக்கும் முக்கிய இயக்கமான கிராமசக்தி மக்கள் இயக்கம் இன்று வெற்றிகரமாக நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

உற்பத்தி செயன்முறைகளின் மூலம் வறுமையை ஒழித்து சுயமாக எழுந்திருக்கக் கூடிய பிரஜைகளை உருவாக்குவது இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் விசேட அம்சமாகும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் ஜனாதிபதி இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.