மட்டக்களப்பு வரும் தமிழ் அமைச்சர்களுக்கு கூட்டமைப்பு விடுத்த முக்கிய கோரிக்கை!

Report Print Navoj in அரசியல்
183Shares

இந்த அரசாங்கத்தைக் கொண்டு வந்ததில் எங்களுக்கும் பெரும்பங்கு இருக்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சந்திவெளி சித்தி விநாயகர் வித்தியாலத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் இந்த அரசாங்கத்திற்குக் கொடுத்த ஆதரவின் நிமித்தம் தான் இவ்வாறான பல அபிவிருத்திகள் எங்கள் மக்களை நோக்கி வந்திருக்கின்றன.

ஒக்டோபர் 26ம் திகதி ஜனாதிபதியினால் ஏற்படுத்தப்பட்ட சதிப் புரட்சியின் காரணமாக பல பின்னடைவுகள் திடீரென ஏற்பட்டது.

இருப்பினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போதைய ஆட்சிக்குப் பொருத்தமாக இருக்கக் கூடியது ஐக்கிய தேசியக் கட்சியே என்பதை உணர்ந்து அதற்கான ஆதரவை வழங்கி இன்று அமைச்சர் அவர்கள் இந்த மண்ணிற்கு வருவதற்கு வழியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது என்பதில் நாங்கள் பெருமை கொள்கின்றோம்.

இன்று எமது மக்களுக்குப் பல அபிவிருத்தி வேலைகள் இந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஆனால் எமது பகுதிகளில் இன்னும் பல தேவைகள் இருக்கின்றன. அமைச்சர் மனோ கணேசனுக்கான அன்பான வேண்டுகோளா நான் விடுப்பது.

அமைச்சர் அடிக்கடி எமது மட்டக்களப்புக்கு வரவேண்டும். எமது மக்களுக்கான அபிவிருத்திப் பணிகளில் தொடர்ந்தும் ஈடுபட வேண்டும்.

ஆனால் வரும் போது எங்களுக்கும் தெரியப்படுத்தி வரவேண்டும் என்பதையும் இந்த இடத்தில் தெரிவிக்கின்றேன். ஏனெனில் அமைச்சர் வருவது எங்களுக்குத் தெரிவதில்லை.

இங்கு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் வரும்போது எங்களுக்கு அறிவித்தல் வருகின்றது. அவர்களை வரவேற்பதற்கு நாங்களும் செல்லுகின்றோம். ஆனால் எங்களது தமிழ் அமைச்சர் இங்கு வரும்போது நாங்கள் வரவேண்டிய கடமை இருக்கின்றது.

எனவே எங்களுக்குத் தெரியப்படுத்தி வரவேண்டும் என்பதைக் கேட்டுக் கொள்கின்றேன். ஏனெனில் இந்த அரசாங்கத்தைக் கொண்டு வந்ததில் எங்களுக்கும் பெரும்பங்கு இருக்கின்றது.

உங்களோடு சேர்ந்து சேவையாற்ற வேண்டிய பங்கும் எங்களில் தங்கியிருக்கின்றது என்பதை இவ்விடத்தில் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.