பி.எஸ்.எம். சார்ள்ஸிடம் அரசாங்கம் ஒப்படைத்துள்ள முக்கிய பொறுப்பு!

Report Print Murali Murali in அரசியல்

சுங்கதுறையில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கையை அரசாங்கத்துக்கு சமர்ப்பிக்கும் பொறுப்பு சுங்கப் பணிப்பாளர் நாயகம் பி.எஸ்.எம். சார்ள்ஸுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் மங்கள சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சுங்கத்துறையில் இடம்பெறும் ஊழல் மோசடிகள் தொடர்பில் எவரையும் பாதுகாக்கவேண்டிய அவசியம் தமக்கு கிடையாதெனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த விடயம் குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,

“சுங்கத்துறையில் இடம்பெறும் சகலவிதமான ஊழல் மோசடிகள் தொடர்பில் முழு நாட்டுக்கும் தகவல்களை பெற்றுக்கொடுக்கும் பொறுப்பு அங்குள்ள பிரதானிக்கும் தொழிற்சங்கங்களுக்கும் வழங்கப்படுகின்றது.

கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ள பி.எம்.டபிள்யூ சொகுசு வாகனம் சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டமை, கொட்டைப் பாக்கு மற்றும் மிளகு ஏற்றுமதியின் போது இடம்பெற்றுள்ள ஊழல் மோசடிகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இது குறித்த விசாரணை அறிக்கை இரண்டு மாதங்களுக்குள் அரசாங்கத்துக்கு சமர்ப்பிக்கும் பொறுப்பு சுங்கப் பணிப்பாளர் நாயகம் பி.எஸ்.எம். சார்ள்ஸுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Latest Offers