ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வேறு கட்சி ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்காது

Report Print Kamel Kamel in அரசியல்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வேறு கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்களை ஆதரிக்கப் போவதில்லை என கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் ஒருவரே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கம்பஹாவில் நேற்றைய தினம் நடைபெற்ற கட்சி உறுப்பினர் சந்திப்பு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் நிச்சயமாக வெற்றியீட்டி ஜனாதிபதியாவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் கடைநிலை உறுப்பினர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கும் கட்சி என்ற அடிப்படையில் ஜனாதிபதி தேர்தலின் போது கட்சியின் வேட்பாளர் ஒருரையே ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி களமிறக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers