போதைக்கு அடிமையாகியுள்ள அமைச்சர்கள்! அம்பலப்படுத்தும் தென்னிலங்கை அரசியல்வாதி

Report Print Vethu Vethu in அரசியல்

இலங்கையின் சமகால அமைச்சரவையை பிரதிநிதித்துவம் செய்யும் அமைச்சர்கள் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொக்கெய்ன் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான அமைச்சரவை அமைச்சர்கள் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளதாக அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

மாகந்துரே மதுஷ் கைது செய்யப்பட்டமைக்கான முழுமையான பொறுப்பினை பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி லதீப்பிற்கு கிடைக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அதன் கௌரவம் கிடைக்க வேண்டும். மதுஷை கைது செய்ய வேண்டிய நடவடிக்கை கடந்த ஒன்றரை வருடமாக மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

போதைப்பொருள் பாவனையில் ஈடுபடும் கலைஞர்களுடன் தனக்கு இல்லை. எனினும் மதுஷுடன் பல அரசியல்வாதிகள் தொடர்பு வைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார.

நேற்று கண்டி - குருணாகலை அதிவேக நெடுஞ்சாலை கண்கானிப்பு விஜயத்தில் ஈடுபட்ட அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.