திருப்பதி வெங்கடாசலபதி ஆலயத்தில் மகிந்த

Report Print Jeslin Jeslin in அரசியல்

எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச நேற்றைய தினம் இந்தியாவிலுள்ள திருப்பதி வெங்கடாசலபதி ஆலயத்திற்கு சென்றுள்ளார்.

இந்தியாவில் வெளியாகும் இந்து பத்திரிகை வெளியிடும் The Huddle சஞ்சிகையின் மூன்றாவது வெளியீட்டில் சிறப்புரையாற்றுவதற்காக கடந்த 8ஆம் திகதி மகிந்த ராஜபக்ச இந்தியாவிற்கு பயணமாகியிருந்தார்.

இந்நிலையில், 9ஆம் திகதி இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர், தொடர்ந்து பல அரசியல் பிரமுகர்களையும் முக்கியஸ்தர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்நிலையில், நேற்றைய தினம் திருப்பதி வெங்கடாசலபதி ஆலயத்திற்கு சென்ற மகிந்த ராஜபக்ச அங்கு தரிசனம் செய்துள்ளார்.

மேலும், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட குழுவினரும் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.